Sunday, January 15, 2006

முடிவுரை!.
தங்கர்பச்சானை நடிகர் சங்கத்தில் தெவடியா காலில் விழவைத்து அவமாணப் படுத்தியதும் அது சம்பந்தமாக எழுதிய ஒரு வலைப்பதிவர் தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதும் அதனால் ஏற்பட்ட மண உலைச்சலில் ஆரம்பிக்கப்பட்டது தான் சுக்குகாப்பி வழைப் பூ.
“நடிகைகள் விபச்சாரிகளுக்கு ஒப்பானவர்களா?” என்பது தமிழன் எக்ஸ்பிரஸ் இதலில் வந்த “மலைப்பொழுதின் மயக்கத்திலே” தொடரின் மறுபதிப்பு. இதன் நோக்கம் நடிகர், நடிகைகள் ஆராதிக்கப் படவேண்டியவர்கள் இல்லை என்பதை புரியவைப்பதுதான். சினிமாக்காரன்கள் அரசியளுக்கும் ஆட்சிக்கும் வருவதை வெருக்கவேண்டும் அது கருணாநிதியாக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவும் இருந்தாலும் சரி.
செய்திதாள்களைப் பார்த்தால் டாக்டர் பிரகாஷ் கேஸில் பலமுன்னனி நடிகைகள் தொடர்பு. நடிகை மாதுரி,வினிதா, விபச்சார வழக்கில் கைது என்பது மட்டுமன்றி பலமுன்னனி நடிகைகளின் விபச்சார தொழிலுக்கு புரோக்கராகவும் செயல்பட்டும் இருக்கிறார் என்பதும் தெரிகிறது இது இன்று மட்டும் நடப்பது அல்ல சினிமா தோன்றியது முதலே இதுதான் நிலைமை.அகப்பட்டவ விபச்சாரி,அகப்படாதவ பத்தினிகள்.

இப்படி தவறான செயல்களில் நடிகைகள் ஈடுபட
நடிகர்கள் மற்றும் திரை உலகை சேர்ந்த மற்ற ஆண்களும்தான் காரணம் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது.முன்னால் நடிகை ஒருவர் அவருடன் நடித்த நடிகர் இறந்த சமயத்தில் வாரப் பத்திரிக்கை ஒன்றில் ஒருதொடர் எழுதினார் அதில் ஒரு நடிகரை குறிப்பிட்டு நான் அந்த நடிகருக்கு(பலரில் அந்த நடிகரும் ஒருவர்) தாலி கட்டாத மனைவியாக இருந்தேன் அவர் இறந்த உடன் நான் உடன்கட்டை ஏறி இருப்பேன் சட்டம் அனுமதிக்காது என்பதால் நான் அப்படி செய்யவில்லை என்று எழுதிஇருந்தார் இதிலிருந்து அந்த நடிகையின் அந்தரங்கம் மட்டுமின்றி நடிகரின் அந்தரங்கமும் திரை உலகில் உள்ள அத்துனை பேர்களின் அந்தரங்க வாழ்வையும் தெரிந்து கொள்ளலாம்.இந்த லட்சனத்தில் நடிகர்கள் ஆண்மீகம் எல்லாம் பேசுரதும் சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு சாமியார் வேசம் போடுரதும் பார்த்தா வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கு. இவனுங்க கோயிலுக்கு போனா சாமி அங்கு இருக்குமா.

புதுமைப் பெண் படத்திற்கு வரி விளக்கு கிடைப்பதற்காக அந்தப்படத்தில் நடித்த நடிகையை அப்போது ஆட்சிப் பொறுப்பில் இருந்தவனுக்கு கூட்டிக் கொடுத்தவனுங்கதான் இவனுங்க.
அந்த நடிகை இப்போது சமூக சேவகியாகவும் பெரிய சிந்தனைவாதியாகவும் மக்கள் முன் பத்தினி வேசம் போடுகிறாள்.நடிகைகளின் அம்மாக்களும் இவனுங்களுக்கு இரையாகிப் பொகின்ற கொடுமையும் நடக்கின்றது.
இப்படி வேசம் போடுபவர்களை அடையாளம் காட்டுவது தான் எனது இப்பதிவு.

Saturday, January 14, 2006

நடிகர் நடிகையின் அருமை-42

அம்மாக்காயால் தெரியாத்தனமாக அந்த வெறியர்களுக்கு விருந்து வைக்கப்பட்ட சிட்டான் சிணுக்கு நடிகையைப் பார்த்ததும் எனக்கு ஒரு மாதி ஆகிவிட்டது. சின்னப் பெண். பதினேழு வயதிருந்தால் பெய விஷயம்.
அந்த மிருகங்களால் இவளுக்கு ஏற்பட்ட உடல் காயம் ஒரு பக்கமென்றால், மனரீதியாக இது வேறு வித பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது எனக்குப் புந்தது. பெண்ணின் முகத்தில் மிகக் கனமான சோகம் தெரிந்தது.
ஆனால் அம்மா முகத்திலோ எந்த வித உணர்ச்சியும் இல்லை. "ஏதோ பொண்ணு கிடைத்தாளே' என்கிற நிம்மதியோடு இருந்தார். சினிமாவில் நுழையும்போது ஏற்படும் இதுமாதி கடுமையான அனுபவங்கள் சிலரைப் புரட்டிப் போட்டுவிடும். இதனால் "வேண்டாம்டா சாமி' என்று ஓடிப் போனவர்கள் ஒரு பக்கம் உண்டென்றால் எதிர்த்து நின்றவர்களும் உண்டு.
""ரொம்ப நன்றிண்ணே'' என்றாள் அம்மா.
""யாரு என்னன்னு பார்க்கணும். பணம் வருதேங்கிறதுக்காக எல்லாத்தையும் செய்யக் கூடாது'' என்று கண்டித்தேன்.
""தெஞ்ச பையன்தான். இத மாதி பண்ணுவான்னு நான் எதிர்பார்க்கல'' என்றாள். ""நடந்தது நடந்து போச்சு. இனிமே ஜாக்ரதையா இருங்க'' என்றேன்.
ஆனால் அம்மா அவ்வளவு சுலபமாக பெண்ணை விட்டு விடவில்லை என்பதை நானறிவேன். அதன் பிறகு எங்கள் சந்திப்பு நடக்கவில்லை. ஆனாலும், அந்தப் பெண் என்னோடு தொடர்புடைய பல இடங்களில் எனது கண்களில் பட்டுக்கொண்டே இருந்தாள். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து அவளுக்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது.
ஆனால் அதற்குள் அவள் படாதபாடு பட்டுவிட்டாள். அம்மாக்கா அவளைக் கண்ட இடங்களுக்கும் அழைத்துச் சென்றாள். கலை விழாக்கள் என்கிற பெயல் ஒவ்வொரு மாநிலத்திலும், ஏன் ஒவ்வொரு நாட்டிலும் அவளது நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
அங்கெல்லாம் பெண்ணைக் காட்சிப் பொருளாக்கி சம்பாதித்தாள். படத்தில் நடிக்க வருவதற்கு முன்பே அவர்கள் பக்காவாக செட்டிலாகிவிட்டார்கள்.
நான் இந்தத் தொடன் ஆரம்பத்தில் ஒரு மாதியான படத்தில் நடித்து பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்ததால் பிஸியாகிவிட்ட அந்த சகோத நடிகையைப் பற்றிச் சொல்லியிருந்தேன் அல்லவா?அவளை அறிமுகப்படுத்திய அதே இயக்குநன் படத்தில்தான் இந்த நாட்டியக்கா நடிகையும் அறிமுகமானாள். அந்தப் படம் ஓஹோவென ஓடாவிட்டாலும் நடிகை, அதற்குப் பின் பல படங்களில் நடித்தாள்.

ஆனால் வழக்கம் போலவே நடிகைகள் திருமண முடிவில் செய்யும் தவறை இவளும் செய்தாள். பிறகு ஒரு மாதித் தேறி வந்து இப்போது சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும் அண்ணி, அக்கா வேடங்களில் கலக்கி வருகிறாள்.
அது போகட்டும். மகாபலிபுரத்தில் நடைபெற்று வந்த அந்தப் படப்பிடிப்பைப் பற்றிப் பார்ப்போம். முதல் நாள் ஷூட்டிங் முடிந்து வந்து படுத்ததும்தான் இப்படி ஒரு அனுபவம். அதற்கு அடுத்த நாள் எனது வாழ்க்கையே மாறிப் போய்விடும் என்பது தெயாது.
இளைய திலகமான நடிகர் அன்று இரவு என்னை அழைத்தார். எனக்கு அவர் மிக மிக நெருக்கம். இரவு நேரங்களில் ஃப்ரீயாக இருந்தால் தான் தங்கியுள்ள அறைக்கு அழைத்துப் பேசுவார். அன்றும் அப்படித்தான் அழைத்தார்.
""சந்துரு...! இந்தத் தொழிலுக்கு வந்து எவ்வளவு நாளாச்சு?'' என்றார் அன்போடு. ""அதிருக்கும் இருபது வருஷம்'' என்றேன்.
""என்ன சம்பாதிச்சே?'' என்றார். ""பெருசா இல்ல. ஏதோ உங்கள மாதி சிலர்கிட்ட நல்ல பேரு வாங்கி இருக்கேன்'' என்றேன்.
""போதும் சந்துரு! உனக்கு வயசாயிட்டே வருது. அலைஞ்சதெல்லாம் போதும். சொந்தமா வீடு வாங்கு. லேட்டஸ்ட் உபகரணங்களோடு ஒரு ஸ்டூடியோ போடு! அதுல வர்ற வருமானம் உன்னை நல்லா வைச்சுக்கும்'' என்றார்!
நான் அவரைப் பார்த்துச் சித்தேன் கனிவோடு.
""அதுக்கெல்லாம் நான் எங்கே போவேன்?'' என்றேன்.
அவர் பதில் பேசாமல் கம்மென்றிருந்தார். ஷூட்டிங் முடிந்ததும் தனது அலுவலகத்தில் வந்து பார்க்கச் சொன்னார். போய்ப் பார்த்தேன். சடாரென்று எனக்குத் தேவையான நிதியுதவியை என்னிடம் திணித்தார். அதைப் பார்த்த எனக்கு ஆனந்தத்தில் அழுகையே வந்துவிட்டது.
அந்தப் பணத்தில்தான் எனக்குத் தேவையான கேமிரா உபகரணங்களை சொந்தமாக வாங்கினேன். இன்னொரு இடத்தில் ஸ்டூடியோ போட்டேன். வருடங்கள் வேகவேகமாக நகர்ந்தன. அவருடைய தயவால் வாழ்க்கையை செüகயமாக இப்போது ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.
நான் சந்தித்த மனிதர்கள், எனக்கு உதவி செய்தவர்கள், நான் பிறருக்கு செய்த உதவிகள் இதைப்பற்றியெல்லாம் அசை போடுவது மட்டுமே இப்போது எனக்குப் பொழுதுபோக்கு.
இப்போது நான் ஆக்டிவ்வாக இல்லை. படங்களுக்கு ஸ்டில் எடுக்க என்னிடம் வேலைபார்க்கும் பையன்கள்தான் போகிறார்கள். நான் அவ்வப்போதுதான் ஷூட்டிங் ஸ்பாட்டுகளுக்குப் போவேன். ஆங்காங்கே நான் அறிமுகப்படுத்திய அத்தனை முகங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சிலர் வேகமாக வளர்ந்து... சிலர் வீழ்ந்து...
தினச கோடம்பாக்கத்து வீதிகளில் நடக்கும்போது எவ்வளவோ முகங்கள் என்னைக் கிராஸ் செய்கின்றன. சிலர் "அண்ணே' என்பார்கள். சிலர் கையை மட்டும் உயர்த்திவிட்டுப் போவார்கள்.
எனது வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு இளம் நடிகை இருக்கிறார். இப்போதுதான் வளர்ந்து வருகிறார். சில மாதங்கள் வரை தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தார். திடுமென பெயரும் புகழும் வர... இப்போது நடிகை?
இரவு நேரங்களில் கார் வருகிறது. யார் யாரோ வருகிறார்கள்; போகிறார்கள். நான் அமைதியாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இப்போதெல்லாம் நான் யாருக்கும் "அட்வைஸ்' பண்ணுவதில்லை. ஏனென்றால் "அனுபவம்' போதிக்கின்ற நிஜம்தான் நிலைக்கும்.
அட்வைஸ் என்பது, மாலைப்பொழுதுகளின் மயக்கத்தினில் மழுங்கிப் போய்விடும் என்பது எனக்கு நிச்சயம் தெயும். ஏனெனில் அது என் அனுபவம்.(முற்றும்)

நடிகர் நடிகையின் அருமை-41

பார்வதியையும் அந்த அக்கா நடிகையையும் பஞ்சாயத்துப் பேசி நான் சேர்த்து வைத்த பிறகு, இருவரும் பக்காவாக செயல்பட ஆரம்பித்தனர்.
அதன்பிறகு அபார்ட்மெண்ட் அúஸôஷியேஷனில் உள்ள பொறுப்பாளர்களை வளைத்துப் போட்டுக் கொண்டு அதே இடத்தில் அவர்கள் சில வருடங்கள் குப்பை கொட்டியது நிறைய பேருக்குத் தெயும்.
அúஸôஷியேஷன் புகார் செய்யாததால் போலீஸôரும் அதைப் பெதாகக் கண்டுகொள்ளவில்லை. பார்வதி உச்சத்தில் இருந்தது அப்போதுதான். ஒரு வீட்டில் சில பெண்களும், இன்னொரு வீட்டில் அக்கா நடிகையுமாக தூள் கிளப்பினார்கள்.
இப்படி வந்து கட்டிக் கொண்டு சம்பாதித்தாலும் பார்வதி கையில் ஏனோ பெதாக எதுவும் காசு தங்கவில்லை. இப்போது அவளுடைய மகள்கள் சினிமாவில் தலையெடுத்தும் அவள் கையில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை.
பெய பெண் ஏதோ அவ்வப்போது கொடுத்து வருகிறாள். அதை வைத்துக் கொண்டு பார்வதியின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் வடபழனி ஏயாவில் நடந்து சென்று கொண்டிருந்த பார்வதியை பார்த்தேன். அப்போது எனக்குப் பழைய விஷயங்கள் பல ஞாபகத்திற்கு வந்தன.
இப்போது உடலும், உள்ளமும் தளர்ந்து போன நிலையில் பார்வதியைப் பார்த்தபோது தவறான வழியே கதி என்று போனவர்கள் யாரும் தனது வசதியையும் செல்வாக்கையும் நீண்ட நாட்கள் தக்க வைத்துக் கொண்டதில்லை என்பது தெளிவாகவே புந்தது.
அது போகட்டும்... இப்போது சிட்டான் சிணுக்கு நடிகையின் கதைக்கு வருவோம். அன்றைக்கு அவளது அம்மா என்னைக் கால் ஏற்றிக் கொண்டு ஸ்டூடியோவில் டிராப் செய்து விட்டுப் போனதையும், அதற்குப் பிறகு நடந்ததையும் கூறிவிட்டேன்.

இப்போது சிட்டான்சிணுக்கு நடிகை சினிமாவில் பிரவேசிப்பதற்கு முன் சந்தித்த சில சம்பவங்களைச் சொல்கிறேன். இன்றைக்கு ஆனந்தமாக நடிகை வளைய வந்து கொண்டிருந்தாலும், அவளுக்குள்ளும் நிறைய காயங்கள் உண்டு. அது எல்லாமே அவள் அம்மா ஏற்படுத்திய காயங்கள்!
அப்போதெல்லாம் மகாபலிபுரம் பல வகைகளிலும் "போக பூமி'யாக விளங்கியது. நூறு ரூபாயில் தொடங்கி, பத்தாயிரம் ரூபாய் வரை பெண்கள் மிகச்சுலபமாகக் கிடைப்பார்கள். லாட்ஜ் தோறும் ஏராளமான பெண்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
ஒருமுறை அப்போது அங்கே எஸ்.பி.யாக பதவியேற்றவர் திடுமென ஓரவு ரெய்டு நடத்தியபோது நான்காயிரம் பெண்கள் பிடிபட்டார்கள் என்றால் மகாபலிபுரத்தின் மகிமையைத் தெந்து கொள்ளலாம். ஆனால் அந்த எஸ்.பி. அடுத்த வாரமே அங்கிருந்து மாற்றப்பட்டது தனிக் கதை!
பெண்கள் விஷயத்தில் இப்படியிருந்த மகாபலிபுரத்தை, நம்மூர் நடிகைகள் சிலரும் அடிக்கடி அலங்கத்தார்கள். இதற்கு வெயிட்டான காரணம் உண்டு. வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை மகிழ்வித்தால் ஏராளமான பணம் கிடைக்கும் என்பதுதான் அது.
அதேநேரம் வெளிநாட்டு உல்லாசவாசிகளிடம் சிக்கினால் உடம்பு புண்ணாகிவிடும். இது நிறைய பெண்களுக்குத் தெயாது. பணம் வருகிறதே என்று போய்விடுவார்கள். காலையில் கொண்டு வந்து விடுகிறேன் என்று கூறிவிட்டு அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் பங்களாவிற்குப் பெண்களைக் கொண்டு சென்றுவிடுவார்கள்.
திரும்பி அனுப்பும்போது குற்றுயிரும் குலையுயிருமாகக் கொண்டு வந்து விடுவார்கள். "தங்கமான' ஒரு படத்தின் சில காட்சிகளை மகாபலிபுரத்தில் எடுத்தார்கள். அந்தப் படத்தில் பணியாற்றிய ஸ்டில் ஃபோட்டோகிராபர் திடீரென்று வெளியூர் போய்விட்டதால் நான் சில நாட்கள் அந்த யூனிட்டில் வேலை செய்தேன்.
அன்றைய தினம் மகாபலிபுரத்தில் இரவில் படப்பிடிப்பு. விடிய விடிய ஷூட்டிங் நடத்திவிட்டு அனைவரும் களைப்பாக அறைகளுக்குத் திரும்பினோம். அடுத்த நாளும் படப்பிடிப்பு உண்டு என்பதால் தூங்கி ரெஸ்ட் எடுத்துவிட்டு ஆறு மணிக்கு ஷூட்டிங் தொடங்க ஏற்பாடு.
நான் ரூமுக்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே என்னை யாரோ பார்க்க வந்திருப்பதாக ரூம் பையன் கூறினான். வரவேற்பறைக்குச் சென்றேன். அங்கே ஒரு சேல் சிட்டான் நடிகையின் அம்மா அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் துக்கம், சோர்வு எல்லாம்...!
""இந்த நேரத்துல இங்க என்ன பண்றீங்க...?'' தயக்கமாகக் கேட்டேன். பட்டென அழத் தொடங்கிவிட்டாள். அவளை சமாதானப்படுத்தி பேச வைப்பதற்குள் ஒரு வழியாகிவிட்டேன்.
அவள் கூறியதன் சாராம்சம் இதுதான்: இரவு மகளை அதாவது சிட்டான் நடிகையை யாருக்கோ விருந்தாக்குவதற்காக அழைத்து வந்திருக்கிறாள். புத்தம் புது சரக்கல்லவா..? போட்டி அதிகமாக இருந்திருக்கிறது. பெரும் தொகையைக் கொடுத்துவிட்டு ஒருவர் பெண்ணை அழைத்துப் போயிருக்கிறார்.
காலை ஐந்து மணிக்குத் திரும்ப அனுப்பிவிடுவதாகக் கூறி இருக்கிறார். ஆனால் சொன்னபடி பெண் வரவில்லை. அதுதான் அம்மா அழுததற்குக் காரணம்.
அன்றைக்கு எனது தூக்கம் அவ்வளவுதான் என்பது எனக்குப் புந்தது. என்ன நடந்திருக்கும் அல்லது நடந்து கொண்டிருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். ஆனால் எதையும் சொல்லி அவள் மனதில் பயத்தை ஏற்படுத்த விரும்பவில்லை. எனக்கு வேண்டப்பட்டவர்கள் மூலம் போலீûஸத் தொடர்பு கொண்டேன்.
நல்லவேளை, யாரோடு அனுப்பினேன் என்பதற்கு ஆதாரமாக இரண்டு பேர்களை அம்மாக்கா தெந்து வைத்திருந்தாள். இன்ஸ்பெக்டடம் அந்தப் பெயர்களைக் கூறினேன். அவர் இரண்டு முறை ஃபோனில் பேசினார். பிறகு, ""நீங்க தங்கியிருக்கிற ரூமுக்குப் போங்கம்மா... உங்க பொண்ணு வந்திடும்'' என்றார்.
ஆட்டோ பிடித்துக் கொண்டு அந்த கெஸ்ட் ஹவுஸ் நோக்கி விரைந்தோம். அங்கே சிட்டான் நடிகை வந்து சேர்ந்திருந்தாள். கன்னத்திலும் கழுத்திலும் பல் அடையாளம். அதோடு உடம்பில் பல இடங்களில் அந்த வெறியர்கள் அடையாளம் பதித்திருந்தார்கள். (தொடரும்)

நடிகர் நடிகையின் அருமை-40

""எனக்கு ஒரு உபகாரம் செய்யணும்'' என்றேன். ""உங்களுக்கு இல்லாததா? எங்க ஃபேமிலிக்கு நீங்க எவ்வளவோ நல்லது செஞ்சிருக்கீங்க. எதையும் நாங்க மறக்கமாட்டோம். என்ன செய்யணும்னே?'' என்றாள் ஆர்வமாக. அவள் கேட்ட விதத்திலேயே எதையும் மறுக்க மாட்டாள் என்பது புந்தது.

""இல்ல. இங்கதான் பார்வதியும் இருக்குது. தெயுமில்ல..?'' என்றேன். ""பசங்க சொன்னாங்க'' என்றவள், ""அவங்களுக்கு நான் எந்த விதத்துலேயும் தொந்தரவா இருக்க மாட்டேண்ணே'' என்றாள்.
""அதில்ல... ரெண்டு பேரும் இங்க இருந்தா ஆபத்து. ரெண்டு பேருக்கும்தான். அதான் உன்னால வேற இடத்துக்குப் போக முடியுமான்னு பார்வதி கேட்கச் சொல்லிச்சு. வேணும்னா அவளையும் உன்னைப் பார்த்து பேசச் சொல்லட்டுமா?'' என்றேன்.
""ஐயோ... அக்கா என்ன நெனைக்கிறாங்கன்னு எனக்குத் தெயுதுண்ணே. இதுல நான் ஏதும் முடிவெடுக்க முடியாதே'' என்றாள்.
""என்ன சொல்றே? இவங்க எல்லாம் உன்னை நம்பித்தானே வந்திருக்காங்க'' என்றேன்.
""இல்லண்ணே. இவங்களுக்கு இப்ப நான்தான் காப்பாளர். ஆனா எல்லாருமே அவரு ஏற்பாடு'' என்றவள், பிரபல தயாப்பாளர் ஒருவன் மேனேஜராக இருந்தவருடைய பெயரைச் சொன்னாள். எனக்குத் தூக்கி வாப் போட்டது.
""ஆந்திரா, கேரளான்னு செலக்ட் பண்ணிக் கொண்டு வந்திருக்காரு. எதுக்குன்னு தெயலண்ணே. இங்க வந்து நாலு நாளாவுது. ஃபிளாட்டுல எங்களுக்கு ராஜ மயாதை. செகரேட்டயேட் லெவல்ல அவருக்கு ஃபிரெண்டெல்லாம் இருக்காங்க.
ரெண்டு பேர வெளியே போகச் சொன்னாரு. போயிட்டு வந்தாங்க. மகாபலிபுரம் போய் வந்ததா சொன்னாங்க. சொந்தமா படம் எடுக்கப் போறாராம்.
அதுக்காக ஃபைனான்ஸியர அங்க வச்சுமீட் பண்றாரு'' என்றாள்.
""அப்ப நீ எதுக்கு?'' என்றேன். ""எல்லாரையும் கட்டி மேய்க்க வேணாமா, அதுக்குத்தான்'' என்றாள்.
""அப்ப இந்த விஷயத்துல உன்னால ஏதும் செய்ய முடியாதா?'' என்றேன் எச்சலாக.
""ஒண்ணு செய்ய முடியும்ண்ணே'' என்றாள். நான் அவளையே பார்த்தேன். ""அதகூட உங்ககிட்ட சொல்ல முடியாது. பார்வதி அக்கா இப்ப எங்க இருக்காங்க?'' என்று கேட்டாள்.
""இங்கதான் அவங்க ஃபிளாட்டுல'' என்றேன்.
""என்கிட்ட ஃபோன்ல பேசச் சொல்லுங்களேன்'' என்றவள், பேப்பல் நம்பரைக் குறித்துக் கொடுத்தாள். நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு எழுந்து கொண்டேன். மெதுவாக நடந்து பார்வதி வீட்டுக்கு வந்தேன்.
""என்னாண்ணே?'' பார்வதி ஆர்வமாகக் கேட்டாள். ""உன்னோட பேசணுமாம். பேசு'' என்றபடி ஃபோன் நம்பரைக் கொடுத்தேன்.
யோசிப்பாக என்னையே பார்த்தவள், மெதுவாக நம்பரைப் போட்டாள். நான் இருந்ததாலோ என்னவோ, கார்ட்லெஸ்ûஸ எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
சில விநாடிகள் கழித்து வந்தவள் முகத்தில் கொள்ளை மகிழ்ச்சி.
""அண்ணே... நீங்க பிரச்னைன்னு வந்தா கூட நல்ல முடிவுதாண்ணே வருது'' என்றாள்.
""என்ன முடிவு?'' என்றேன்.
""அது டெய்லி இங்க வருதாம். கஸ்டமர் ஏற்பாடு பண்ணச் சொல்லுது'' என்றாள். நான் தலையிலடித்துக் கொண்டு நகர்ந்தேன். (தொடரும்)

நடிகர் நடிகையின் அருமை-39

நான் பார்வதியையே பார்த்தேன்.
""அண்ணே'' என்றவள் மெதுவாக அந்தப் பெயரை என் காதில் கிசுகிசுத்தாள். ""ஏய்! பொய் சொல்லாதே'' என்றேன்.
""இல்லண்ணே. நானே அவளை நேத்து பாத்தேன். அதான் உங்ககிட்ட வந்தேன்'' என்றாள்.
அவள் கூறியது மார்க்கெட் இல்லாமல் திருமணம் செய்து கொண்டு வெளிநாடு போன அக்கா நடிகை. அந்த இடத்திலிருந்து அவளைக் கிளப்புகிறோமோ இல்லையோ அவளைப் பார்த்தே தீருவது என்கிற முடிவுக்கு வந்தேன். காரணம், அவளுக்கு நான் நிறைய உதவிகள் செய்திருக்கிறேன். இப்போது அவள் எப்படி இருக்கிறாள் என்பதைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.
கடைசியாக சில வருடங்களுக்கு முன் ஒரு அரசியல்வாதி வீட்டில் இரவு நேரத்தில் சந்தர்ப்பவசமாக படுத்திருந்தபோது கால் வந்து இறங்கியவள். அதற்குப் பிறகு அவளுக்கு மார்க்கெட் போய் திருமணம் செய்து, அந்தத் திருமணம் நிலைக்காமல் போய்...
அவளது வாழ்க்கையில் நிறைய அதிரடித் திருப்பங்கள்.
""நான் உனக்கு ஹெல்ப் பண்றேனோ இல்லையோ, நாளைக்கு வர்றேன். அவளைப் பாக்கணும்'' என்றேன் பார்வதியிடம்.
""அண்ணே! எப்படியாச்சும் அங்கயிருந்து கிளப்பி விட்டுடுங்கண்ணே. அúஸôசியேஷன் ஆளுங்க மூலமா கிளப்பிடலாம்னு நெனைச்சேன். நீயும் சேர்ந்து போயிடுங்கிறாங்க.
அவ செமர்த்தியா கவனிச்சிட்டா. அதேநேரம், ரெண்டு பேரும் அங்க இருந்தா போலீஸ்காரங்க சுலபமா மோப்பம் பிடிச்சிடுவாங்க'' என்றாள்.
""ச ச... நான் வந்து பேசிப் பாக்கறேன்'' என்றேன். அன்றைய தினமே புறப்பட்டேன். இரவு ஒன்பது மணி இருக்கும். அபார்ட்மெண்ட்டுக்குச் சென்று குறிப்பிட்ட அந்த வீட்டை நெருங்கியபோது ஒரு இளைஞன் என்னை மறைத்தான்.
""ஸôர்! என்ன வேணும்'' என்றான் பதற்றத்துடன். எனக்குப் புந்தது. அவன் ஒரு ஏஜெண்ட். தேடி வருபவர்களை பத்திரமாக நடிகையிடம் கொண்டு போய் சேர்ப்பவன். இவனை மீறிப் போனால் ரசாபாசமாகி விடும்.
ஆகவே ""ஃபோட்டோகிராபர் சந்துரு வந்திருக்கேன்னு சொல்லுங்க'' என்றேன். அவன் நகர்ந்தான். குழந்தைகள் ஓடி விளையாடின. இரண்டு நடுத்தர வயதுப் பெண்கள் கையில் அர்ச்சனைக் கூடையுடன் நடந்தார்கள். ஒரு தாத்தா அடிமேல் அடி எடுத்து வைத்து நடை பழகினார்.
என்ன ஒரு சந்தேகமே ஏற்படாத அட்மாஸ்பியர்! எனக்கு வியப்பாக இருந்தது. சில விநாடிகள் சென்றிருக்கும். அந்த வீட்டின் கதவு பளிச்சென்று திறந்தது. ""அண்ணே நீங்களா?'' என்றபடி அக்கா நடிகை.
கல்யாணமாகியிருந்தாலும் பளிச்சென்று அவளது அழகு, முகத்தில் அறைந்தது. தென்னங்கீற்று போன்ற உதடுகளும், சந்து இறங்கிய கழுத்தும், மலையாளப் பெண்களுக்கே உய இளமையும்...
பார்வதி கூறியது உண்மை என்றால், இவள் அபார்ட்மெண்ட்ல உள்ள அத்தனை ஆண்களையும் வளைத்துப் போட்டுவிடுவாள் என்பது எனக்கு உறுதியாகத் தெந்தது. (தொடரும்)
பார்வதிக்குப் போட்டியாகத் தொழில் நடத்திக் கொண்டிருந்த அந்த அக்கா நடிகையை நான் சற்றே வியப்பாகப் பார்த்தேன். இவ்வளவு அழகும் எப்படி அவளிடம் மாறாமல் இருக்கிறது என்ற விஷயம் எனக்குள் பெய ஆச்சயத்தை ஏற்படுத்தியது.
அதேசமயம் உதறிவிடக்கூடிய அளவிற்கு இவளது கணவன் இவளிடம் எதைக் குறையாக கண்டான் என்றும் யோசித்துப் பார்த்தேன். சினிமாவில் மட்டுமல்ல... நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் கூட எதிர்பார்க்க முடியாத திருப்பங்கள் நேர்ந்துவிடுவது உண்டு என்பது எனக்குத் தெளிவாக விளங்கியது.
""எப்படிண்ணே இருக்கீங்க?'' நடிகை பாசமாகக் கேட்டாள்.
""நான் நல்லாயிருக்கேன். ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்றோம் இல்ல?'' என்றேன். ""ஆமாண்ணே... என்னென்னவோ நடந்து போச்சு'' என்று பெருமூச்சு விட்டாள்.
அப்போதுதான் நான் அதைக் கவனித்தேன். அந்த ஹாலை சுற்றி இரண்டு அறைகள் இருந்தன. இரண்டிற்கும் ஸ்கிரீன் இருந்தது. ஆனாலும் அதன் வழியே அறையில் சில கால்கள் நடை பயில்வதைக் காண முடிந்தது. எல்லாமே கொலுசணிந்த கால்கள்.
நான் கவனித்துவிட்டதை அவளும் பார்த்திருக்க வேண்டும். ""என்னண்ணே..?'' என்றபடி சித்தாள். நான் அமைதியாக இருக்க... சட்டென்று கை தட்டினாள்.
திமுதிமுவென்று அறைக்குள்ளிருந்த அனைவரும் வெளியே வந்தார்கள். ஒன்று, இரண்டு... என்னால் சயாக எண்ண முடியவில்லை. கிட்டத்தட்ட எட்டு மங்கைகள் இருப்பார்கள். இவ்வளவு பேரையும் எப்படி உள்ளே கொண்டு வந்தாள் என்று எனக்கு வியப்பாக இருந்தது.
ஒவ்வொருவரையும் உற்றுப் பார்த்தேன். லட்டு என்பார்களே அப்படி இருந்தார்கள். அழகு ஒருபுறமென்றால், இளமை மறுபுறம் கண்களைக் கொள்ளை அடித்தது. இவ்வளவு பெண்களை வைத்து பிஸினஸ் செய்தால் போலீஸ் சுலபமாக மோப்பம் பிடித்துவிடும். அதோடு அபார்ட்மெண்ட்வாசிகளும் கண்டுபிடித்து விடுவார்கள்.
""இதுல யாராவது ஹீரோயினுக்குத் தேறுவாங்களா?'' என்று கேட்டாள் நடிகை. நான் சித்தேன். அவர்களை அவள் திரும்பிப் பார்க்க, அனைவரும் மறுபடியும் அறைக்குள் தஞ்சமடைந்தார்கள்.
""இப்ப சொல்லுங்க. நான் இங்க இருக்கிறதா யாரு சொன்னா..?'' சிரித்தபடி கேட்டாள்.(தொடரும்)

நடிகர் நடிகையின் அருமை-38

இதில் கொடுமை என்ன தெயுமா? ஆரம்பத்தில் இந்தச் சுகங்களுக்காக அம்மாவின் பின் போகும் பெண்களுக்கு பிற்பாடு பொன்னும் பொருளும் அலுத்து விடும். திருமணம், குழந்தை என செட்டிலாகத் துடிப்பார்கள்.
அப்போது அம்மா அதற்கு அனுமதிக்க மாட்டார். இன்னும் கொஞ்சம் சம்பாதித்துவிட்டு செட்டிலாகிவிடலாம் என்பார். சமீபத்தில் கூட ஒரு நடிகையின் கதை இப்படித்தான் ஆனது. பிறகு அவர் சுவரேறிக் குதித்த கதை அனைவரும் அறிந்ததுதான்.
சிட்டான் நடிகையின் அம்மா இப்படிக் கூறியதும் நான் அவரைப் பார்த்து மென்மையாகச் சித்தேன். இதுபோல பல வார்த்தைகளைக் கேட்டு விட்டேன். இதில் துரதிருஷ்டம், எதையும் நான் விட்டுவிட்டுப் போகாததுதான்.
சுற்றிச் சுற்றி இதுபோன்ற ஆட்கள் ஏன் என்னை மொய்க்கிறார்கள் என்று பலமுறை என்னை நானே கேட்டுக் கொண்டு அதற்கு உய பதில் கிடைக்காமல் திண்டாடியிருக்கிறேன்.
""இவ அரங்கேற்றம் முடிஞ்சிட்டுது. இன்னைக்கு இவ ஃபிரெண்ட் ஆடினா. அதுக்காக வந்தோம். நல்லா இருக்கீங்களா?'' மீண்டும் கேட்டார் அம்மா.
"ம்' என்று சித்தேன்.
""இவ நடிக்கணும். ரொம்ப ஆர்வமா இருக்கா. முகவெட்டும் நல்லா அமைஞ்சிருக்கு. பல இடங்கள்ல முயற்சி பண்ணிகிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்சம் வளரட்டும்கிறாங்க. உங்களுக்குத் தெஞ்ச இடமிருந்தா சொல்லுங்க'' என்றார்.
""சம்மா'' என்றேன்.
""இப்ப எங்கப் போறீங்க?''
""என் ஸ்டூடியோவுக்குப் போறேன்'' என்றேன்.
""நான் விட்டுட்டுப் போறேன். வாங்க'' என்றார்.
நான் ஆட்டோவில்தான் வந்திருந்தேன். திரும்புவதற்கும் ஆட்டோதான் பிடிக்க வேண்டும். கால் போய்விடலாமே என்கிற எண்ணத்துடன் தலையாட்டினேன்.
மூன்று பேரும் கால் ஏறினோம்.
காரை அம்மாக்காதான் டிரைவ் செய்தார்.
பேசியபடியே நிதானமாக ஓட்டினார். ""வீட்டுல ஏகப்பட்ட பிரச்சனைண்ணே... அவரு குடும்பத்தக் கவனிக்கிறது இல்லை. இப்பல்லாம் வீட்டுக்கே வர்றது இல்ல. இவ நெகுநெகுன்னு வளர்ந்து நிக்கிறா. சினிமாவில நடிக்கிறதுக்கும் ஆர்வமா இருக்கா... அதான்'' என்றார்.
""தங்கச்சி எப்படி இருக்கா?'' கேட்டேன். ""அவளுக்கு என்னண்ணே... வீட்டுக்காரர் புஞ்சுகிட்டு நடந்துக்கறவரு. அதனால ஒன்னும் குறைச்சல் இல்லாம இருக்கா...'' என்றார்.
நான் அவரைப் பார்த்து ஆழமாகச் சித்தேன். எனது சிப்பில் இருந்த அர்த்தம் அவருக்குப் புந்திருக்க வேண்டும். அவசரமாக கவனத்தைச் சாலையை நோக்கித் திருப்பினார்.
தங்கச்சியின் பெயர் பழம்பெரும் குணச்சித்திர நடிகையின் பெயரைக் கொண்டது. சில வருடங்களுக்கு முன் அவர் பரத நாட்டியம் கற்றுக் கொண்டது, ஒருத்தருக்கு மனைவி ஆனது எல்லாம் உண்மைதான்.
ஆனால் அவன் இன்றைய நிலை சிறிது வருத்தத்திற்குயது. காரணம் ஏழ்மை. குடித்துக் குடித்தே குடும்பத்தைப் பாழுங்கிணற்றில் தள்ளி விட்ட கணவன். உதவ யாரும் இல்லாத நிலை. இதனால் சாலிகிராமத்தில் உள்ள ஒரு சகோத நடிகை வீட்டில் தஞ்சமடைந்தார்.
அவன் இருப்பு அந்த வீடுதான். இருவருமாகச் சேர்ந்து அங்கேயே வாடிக்கையாளர்களை சந்தித்து வந்தார்கள். நடுத்தர வயது பெண்களை விரும்பும் பல அன்பர்களின் தாகத்தை இவர்கள்தான் தீர்த்து வந்தார்கள்.
இவர்களுக்கென்று யாரும் ஏஜெண்ட் கிடையாது. தங்களது பழக்க வழக்கங்களை வைத்துக் கொண்டே பலரை வளைத்துப் போட்டு வைத்திருந்தார்கள்.
அந்த அளவிற்கு சர்வீஸ் இருக்குமாம். இன்றைக்கும் கம்பீரமாக நிற்கும் அந்த வீடு, ஒரு ரகசிய பங்களாதான். அங்கே நடக்கின்ற சம்பவங்களைத் தொகுத்தால் தனி புத்தகமே போடலாம். (தொடரும்)
அந்தக் கம்பீரமான பங்களாவில் தங்கைக்கா நடத்தும் கூத்துக்கள் அனைத்தும் எனக்குத் தெயும். ஆனால் தனக்கு எதுவுமே தெயாததுபோல் இவள் காட்டிக் கொள்கிறாள். பாவம்... தங்கையின் தனிப்பாதையை எந்த அக்காதான் ஒப்பு கொள்வார்.
கார் விரைந்து கொண்டிருந்தது. நான் நினைவு கலைந்து அவளைத் திரும்பிப் பார்த்தேன். ""நேத்து கூட ரகுபதியை சந்திச்சேன். இப்ப அவரு நிறைய படங்களுக்கு ஃபைனான்ஸ் பண்றாரு. நீங்க மனசு வச்சா எந்த ஃபைனான்ஸியரும் மறுக்க மாட்டாங்க. அவங்க சொல்றத புரொட்யூஸருங்களும் கேட்பாங்க.
பாப்பா எங்க கூப்பிட்டாலும் வரும். அதுல உங்களுக்குத் தயக்கமே வேணாம்'' என்றாள் படபடப்பாக. ""இப்ப என்னோட ஒரு முயற்சி ஃபெயிலியராயிடுச்சு. நான் கொஞ்சம் அப்ùஸட்டா இருக்கேன்.
இனி என்னைக் கிராஸ் பண்ணி எந்த ஆஃபர் போனாலும் உடனே உங்களுக்குச் சொல்றேன்'' என்றேன். ""சண்ணே'' என்றாள். கார் ஸ்டூடியோ வாசலில் நின்றது. இறங்கிக் கொண்டேன்.
""அங்கிள் பை'' என்றது அந்தப் பெண். இப்போதுதான் நான் அவளை உற்றுப் பார்த்தேன். நல்ல சிவப்பு. இளமை பொங்கியது. அருமையான உடல்வாகு. இவள் சினிமாவில் படாதபாடு படப் போகிறாள் என்று எனக்குத் தெளிவாகப் புந்தது.
ஸ்டூடியோவுக்குள் நுழைந்தேன். உள்ளே பார்வதி அமர்ந்திருந்தாள். அவள் கண்கள் கலங்கி இருந்தன. அந்த அளவுக்கு என்ன நடந்திருக்கும் என்று எனக்குப் புயவில்லை.
""அண்ணே... நீங்க இப்ப ஃப்ரீதானே?'' என்றாள்.
""பார்வதிக்கு நான் எப்பவுமே ஃப்ரீதான்'' என்றேன்.
""படம் இல்லேன்னு கேள்விப்பட்டண்ணே'' என்றாள்.
""அது முடிஞ்சு போன கதை'' என்றேன்.
""பேசாம காயல் என்கிட்ட இருந்திருந்தா இந்தப் பிரச்னை வந்திருக்காது. நான் இன்னும் நெறைய பணம் பார்த்திருப்பேன். காயல் எனக்கு சொர்க்கபூமி மாதிண்ணே.

கொஞ்ச நாள் இருந்தாலும் நிறைய கஸ்டமர்கள்ண்ணே. ஒரு கிரெüண்ட் இடம் வாங்கினேன்'' என்றாள்.
""வந்த காயத்தைச் சொல்லு'' என்றேன் எச்சலுடன்.
""காயல் தயவால சம்பாதிச்சது எல்லாம் போயிடும் போலயிருக்குண்ணே'' என்று விசுக்கென்று மீண்டும் அழுதாள்.
ஏதோ புதுக்கதை புறப்படுகிறதே என்று நினைத்தேன்.
""இப்ப நான் இருக்கிற அபார்ட்மெண்ட்டுல வீடு பிடிக்கிறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சுண்ணே. அúஸôஷியேஷனை சகட்டித்தான் இப்பத் தொழில் செஞ்சுகிட்டு வர்றேன். முக்கியமான ரெண்டு நிர்வாகிகளுக்கு மாசாமாசம் கப்பம் கொடுத்திடறேன்.
ஆனா "நீங்க செய்யற தப்ப பத்தி எப்ப எங்களுக்குப் புகார் வந்தாலும் உடனே நீங்க காலி பண்ணிடணும்'னு சொல்லிட்டாங்க. நானும் இதுவரைக்கும் என்னைப் பத்தி யாரும் புகார் பண்ணாத அளவுக்கு நடந்துகிட்டு வர்றேன்.
ஆனா இப்ப புதுசா ஒருத்தி முளைச்சிருக்கா. என் வீட்டுக்குப் பக்கத்துல வீட்லயே தொழில் பண்றான்ணே. நெறைய ஆந்திரா சரக்குண்ணே. நான் வீட்டுல எப்பவும் ஒண்ணு இல்ல ரெண்டுதான் வச்சிருப்பேன்.
இவ நாலஞ்சு வச்சிருக்கா. அதோட ரூம்ல டி.வி., டெக் எல்லாம் வச்சிருக்காளாம். ப்ளூ ஃபிலிம் ஓடவிட்டுட்டே என்ஜாய் பண்ணலாமாம். நேத்து அங்க போயிட்டு வந்த ஒருத்தன்கிட்ட விசாச்சேன்'' என்றாள்.
""இதுக்கு நான் என்ன பண்ணணும்?''
""அந்தக் கும்பலை அங்கயிருந்து விரட்டணும்''
""என்ன விளையாடறியா? இதையெல்லாம் செய்யறதுக்கு நான் என்ன போலீஸô, இல்ல ரெüடியா? வேற ஏதாவது உதவி கேளு, செய்யறேன். இத என்னால எப்படி செய்ய முடியும்?'' என்றேன்.
""அண்ணே! அங்க தொழில் பண்றது யாரு தெயுமா? உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்ட ஆளு. நீங்க ஒரு வார்த்தை சொன்னா போதும். உடனே அந்த இடத்தை விட்டுக் காலி பண்ணிடும்'' என்றாள்.(தொடரும்)

நடிகர் நடிகையின் அருமை-37

அந்த ஃபைனான்ஸியடம் தன் மகளை சிபாரிசு செய்யும்படி ராணியின் அம்மா என்னிடம் கூறினாள். என்னுடைய தொடர்புகள் அனைத்தையும் இவள் எப்படி இவ்வளவு பக்காவாகத் தெரிந்து வைத்திருக்கிறாள் என்று எனக்கு வியப்பாக இருந்தது.
இந்த விஷயங்களை எல்லாம் இவளிடம் யார் சொல்லி
யிருப்பார்கள் என்று யோசித்தேன். ராணியின் அம்மா கூறிய அந்த ஃபைனான்ஸியர் தமிழ் சினிமாவில் மிக மிக முக்கியமானவர். எனக்கு நன்றாகப் பழக்கமானவர்.
அவர் வீட்டில் நடைபெறும் விசேஷங்கள் அனைத்தையும் நான்தான் படமெடுப்பேன். என்னிடம் அன்பு கலந்த மரியாதை வைத்திருப்பவர். ராணியின் அம்மாவிடம் ""சரி... சிபாசு பண்றேன்'' என்றேன்.
அப்போது ஃபோன் ஒலித்தது. அம்மாக்காரி எடுத்துப் பேசினாள். ராணி எங்களுக்கு எதிரே வந்து அமர்ந்தாள். குளித்துவிட்டுப் பளபளவென மேக்கப் போட்டுக் கொண்டு வந்திருந்தாள்.
ஃபோனில் பேசிய அம்மாக்காரி, ""சரி, சரி... வாங்க...'' என்று யாருக்கோ அழைப்பு விடுத்து விட்டு ஃபோனை வைத்தாள்.
பிறகு என்னிடம் "ரொம்ப நன்றிண்ணே... இதக் காலாகாலத்துக்கும் மறக்க மாட்டோம்' என்றவள் -"அண்ணே அந்த "வில்லாளி' வர்றாரு. நீங்க...' என்று இழுத்தாள்.
எனக்குப் புரிந்தது. எழுந்து கொண்டேன். அரசியல்வாதியும் எழுந்து கொண்டார். "நீங்க மேல இருங்கண்ணே. டிரிங்க்ஸ் வாங்கிட்டு வரச்சொல்றேன்' என்றாள். சினிமாவின் ஆதாரமான வார்த்தை இதுதான்! "இல்ல, இன்னொரு நாளைக்கு வர்றோம்' என்று கூறிவிட்டு, அதிரடி ஆக்ஷனாக நானும் அரசியல்வாதியும் அங்கிருந்து புறப்பட்டோம்.

அடுத்த நாள் காலை டைரக்டர், அரசியல்வாதி இருவரையும் என் ஸ்டூடியோவுக்கு அழைத்தேன். எதற்காக அழைத்திருக்கிறேன் என்பது புரியாமல் இருவரும் என்னைப் பார்த்தார்கள்.
"உங்களவிட சினிமாவுல நான் சீனியர். முதல்ல படம் பண்ணணும். நல்ல தயாரிப்பாளர்னு பெயர் எடுக்கணும். ஆனா இப்ப உங்க கவனம் அதுல இருக்கிற மாதி தெரியல. ஹீரோவுக்காக நீங்க ஏன் அட்ஜஸ்ட் பண்ணணும்? பேசாம ஹீரோவை மாத்திடலாம். முதல் படமே வெளிய வரல.
அதுக்குள்ள உங்ககிட்ட பிஸினஸ் டீல் பண்றாரா அவரு?' என்று சிறிது கடுமையாகவே கூறினேன். இருவருக்கும் எனது வார்த்தைகளில் இருந்த எச்சக்கை புரிந்திருக்க வேண்டும். "இனிமே இப்படி ஏதும் நடக்காது' என்றார்கள்.
"இருபதாம் தேதி ஷூட்டிங். அது தொடர்பான வேலைய மட்டும் பாருங்க' என்றேன் கறாராக.
"ரிச' என்றார்கள்.
அடுத்த நாளிலிருந்து ஷூட்டிங்கிற்கான வேலைகள் பரபரப்பாகத் தொடங்கின. தினசரி அலுவலகத்தில் காலை எட்டு மணிக்குக் கூடினோம். முதல் படம் என்பதால் பல இடங்களில் இடர்பாடுகள். எல்லாவற்றையும் சமாளித்து சிறிது சிறிதாக முன்னேறினோம். கதை, வசனத்தை இயக்குநர் பக்காவாக ரெடி பண்ணினார்.
தினச, ஹீரோயினுக்கு தமிழ் டிரெயினிங் எடுக்கப்பட்டது. மாலை நேரத்தில் டான்ஸ் கிளாஸýம் போய் வந்தாள். அதுவும் எங்கள் செலவுதான்.
படத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்கிற விவாதத்தில் ஈடுபட்டோம். பல டைட்டில்களை யோசித்தோம். கடைசியில் "பந்தா'வான ஒரு டைட்டில் வைத்தோம்.
இதற்கிடையே ஹீரோயின் நாளுக்கு நாள் மெருகேறி வந்தாள். நல்ல சாப்பாடு, டான்ஸ் பயிற்சி என்று இளமை பொங்க நடமாடினாள். டிûஸனில் அவளது அழகுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம்.
அந்த டிûஸனைப் பார்த்துவிட்டு படப்பிடிப்பே தொடங்காத நிலையில் நான்கு தயாப்பாளர்கள் அவளைத் தேடி வந்தார்கள்.
அவர்கள் எண்ணம் என்னவாக இருக்கக்கூடும் என்பதை நான் உணர்ந்தேன். காயலையும் அவளது அம்மாவையும் எச்சத்தேன்.
இரவு நேரங்களில் அவர்களின் நடமாட்டத்தைக் கவனிக்கத் தொடங்கினோம். அம்மா மட்டும் தினச இரவு ஆஃப் அடித்தாள். அதுவும் கம்பெனி செலவுதான்.
அன்றைக்கு காலை எட்டு மணி இருக்கும். படப்பிடிப்பு தொடங்க நான்கே தினங்கள் இருந்தன. ஸ்டூடியோவுக்கு நான் மட்டும் வந்திருந்தேன். கடைப்பையன்கள் யாரும் வரவில்லை. அப்போது ஒரு மாருதி கார் வேகமாக வந்து கடை வாசலில் நின்றது.
அதிலிருந்து இரண்டு பேர் இறங்கினார்கள். ஒருவர் கருப்பாக ஒல்லியாக இருந்தார். மீடியேட்டர் என்பது புந்தது. அவரை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். இன்னொருவர் சிவப்பாக அழகாக இருந்தார்.
பிஸினஸ் பேச வருகிறார்கள் என்பது புந்தது. இருவரையும் வரவேற்றேன். சினேகமாக கை நீட்டினார்கள். "உங்களைப் பார்த்திருக்கேன். ஸôருதான் யாருன்னு தெயல' என்றேன் அவரைப் பார்த்து.
"நான் காயலோட அப்பா' என்றார். எனக்கு "சுருக்' என்றது. கொஞ்ச நேரத்திற்கு எதுவுமே புயவில்லை. சில மாதங்கள் முயற்சி, பண விரயம், நெறைய செலவு, அதைவிட எதிர்பார்ப்பு எல்லாமே பொய்த்துவிடும் போலிருந்தது.
"ஸôர்! இது என் பொண்டாட்டி. இது என்னோட பொண்ணு. நான் உங்ககிட்ட நிரூபிச்சுட்டேன். அவ படத்துல நடிக்கிறதுல எனக்கு உடன்பாடு கிடையாது' என்றார் திட்டவட்டமாக.
என்னுடன் இருந்த அரசியல்வாதி விதிர்விதிர்த்துப் போய் நின்றார். இயக்குநராக அவதாரமெடுக்கும் ஆசையில் இருந்த அந்த இளைஞனும் அதிர்ந்து போனான். (தொடரும்)
படப்பிடிப்பிற்கான வேலைகள் படு வேகமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் காயலின் அப்பா இப்படி வில்லனாக நுழைவார் என்பதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
""இதுவரைக்கும் ஏறக்குறைய பத்து லட்சம் ரூபாய் செலவு ஆகியிருக்கும்'' என்றேன்.
""அது எனக்குத் தெயாது. பணத்தை நான் கொடுக்கமாட்டேன். இப்ப காயலும் அவளோட அம்மாவும் என்கூட ஊருக்கு வரப்போறாங்க. அவங்கள தடுத்தா, நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். உங்களால எதிர்த்து நிக்க முடியும்னா ஓகே'' என்றபடி எழுந்து கொண்டார்.
சில நிமிடங்களில் காயலும் அவளது அம்மாவும் வந்தார்கள்.
""நான் எதிர்பார்க்கவேயில்லை. என் கூட வந்தேயாகணும்னு அடம்பிடிக்கிறாரு. அதோட பொண்ணு நடிக்கிறதுல அவருக்கு உடன்பாடே இல்லை'' என்றாள் காயலின் அம்மா. குரல் பிசிறடித்தது.
""இதுவரைக்கும் பத்து லட்சம் ரூபாய் செலவு'' என்றேன்.
இப்படி ஒரு நிலை ஏற்படும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அதனால் ஒப்பந்த ஷரத்தில் நஷ்டஈடு பற்றி ஏதும் குறிப்பிடவில்லை.
அத்தனை கனவும் எதிர்பார்ப்பும் கலைந்து போனது. அன்று இரவே காயலையும் அவளது அம்மாவையும் அழைத்துக் கொண்டு அந்த நபர் ரயிலேறினார்.
செகரட்டயேட் நண்பரையும், இயக்குநரையும் தேற்றினேன். நீண்ட நாளைக்குப் பிறகு அன்று இரவு குடித்தேன். இந்த மன உளைச்சலில் தவித்துக் கொண்டிருந்த என் கண்களில் பார்ப்போர்களை சிட்டான்சிட்டான் சிணுக்கு என்று ஆடிப் பாட வைக்கும் ஒரு பெண் தென்பட்டாள்.
அந்தப் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பாவாடை-தாவணி அணிந்து சிவப்பாக நின்று கொண்டிருந்த அவளை நான் முதலில் பார்த்த போது இவள் சினிமாவுக்கு சப்பட்டு வருவாள் என்று எனக்குத் தோன்றவில்லை.
காதில், மூக்கில் வைரங்கள் ஜொலிக்க... முகத்தில் தேஜஸ் மின்னிக் கொண்டிருந்தவளை அவளது அம்மாதான் என்னிடம் இழுத்து வந்தார்.
""உங்களை எனக்குப் பனிரெண்டு வருடமாகத் தெயும்'' என்றார்.
""எப்படி?'' என்றேன்.
""என் தங்கச்சி கல்யாணத்தை ஃபோட்டோ எடுத்தது நீங்கதானே'' என்றார். எனக்கு அப்போதுதான் அது நினைவுக்கு வந்தது.
""ரெண்டு பொண்ணுண்ணே. இது சினிமாவுல நடிக்கணும். அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணலாம்ணே'' என்றார்.
எனக்கு ராணியின் அம்மா நினைவுக்கு வந்தார். அம்மாக்கள்தான் பெற்ற பெண்ணைக் கெடுக்கிறார்கள் என்பதற்கு ஆயிரம் உதாரணங்களை என்னால் அடுக்க முடியும். தான் கெட்டது மட்டுமில்லாமல் பெண்ணையும் தவறான வழியில் இழுத்துச் செல்வதில் அவர்களுக்கு அலாதிப் பியம்.

இதற்குக் காரணம் - பணம், பங்களா இத்யாதிகள்தான்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

src="http://www.thamizmanam.com/tamilblogs/link_img/thamizmanam_link.gif" alt="Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது" width="100" height="42"/>